கமல்ஹாசன் அநாகரீகமாக பேசுகிறார் : பவர் ஸ்டார்!

0
9

நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். வாரபத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எழுதியுள்ளார்.

அதில் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் எனவும் வேட்பாளரை திருடன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தங்களை இழிவுப்படுத்துவதாக கூறி ஆர்கே நகர் தொகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் கமலை கண்டித்து தினகரனின் ஆதரவாளர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அதிகமாகவும், அநாகரீகமாகவும் பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here