தென்னாப்பிரிக்காவில் அசத்திய பாண்ட்யா – புவனேஷ்வர் ஜோடி

0
10

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹர்திக் பாண்ட்யா – புவனேஷ்வர் குமார் ஜோடி, 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது.

கேப்டவுனில் நடந்துவரும் போட்டியின் முதல் நாளில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. முதல் நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, மெதுவாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. நான்காவது விக்கெட்டுக்குத் தடுப்பாட்டம் ஆடிய புஜாரா – ரோகித் ஷர்மா ஜோடி 30 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அஷ்வின் 12 ரன்களிலும், விக்கெட் கீப்பர் சாஹா ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here