நோட்புக் 7 ஸ்பின் 2018 அறிமுகம்

0
33

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

18.5 எம்.எம். தடிமனாக இருக்கும் நோட்புக் 7 ஸ்பின் (2018) 1.53 கிலோ எடை கொண்டிருக்கிறது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி PLS தொடுதிரை கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் சாதனத்தை வழக்கமான கணினி அல்லது டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும்.

256 ஜிபி எஸ்.எஸ்.டி. டிரைவ், விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டிருப்பதோடு லாக்இன் செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலம் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஆக்டிவ் பென் சப்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.

ஆக்டிவ் பென் வழங்கப்பட்டிருப்பதால் மிக எளிமையாக குறிப்புகளை எடுக்க முடியும். இத்துடன் ஸ்டூடியோ பிளஸ் வசதி வழங்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும்.
இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி, யு.எஸ்.பி. 3.0×1, யு.எஸ்.பி. 2.0×1, எச்.டி.எம்.ஐ மற்றும் எச்பி / மைக் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வீடியோ சாட் மேற்கொள்ள வி.ஜி.ஏ. கேமரா ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு, அதன் பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here