பாகிஸ்தானுக்கு நிதியை நிறுத்தியது : அமெரிக்கா

0
12

பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ஹக்கானி தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அளிக்கவிருந்த 20 லட்சம் டாலர் நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார்.

அமெரிக்க அரசின் இந்த முடிவால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ராண்ட் பால் என்பவர், ‘அமெரிக்க நாட்டின் தேசிய கொடியை எரித்தும், அமெரிக்கா ஒழிக என்று கோஷமிட்டும் வரும் நாடுகளுக்கு அமெரிக்கா சல்லிக்காசு கூட கொடுக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நான் விரைவில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணத்தை வைத்து நமது தாய்நாட்டில் சாலைகள்,பாலங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் என தனது வீடியோ செய்தியில் ராண்ட் பால் குறிப்பிட்டிருந்தார்.

ராண்ட் பால் வெளியிட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ’நல்ல யோசனை ராண்ட்’ என்று அவரை பாராட்டியும் உள்ளார். ராண்ட் பால் கொண்டுவரும் மசோதாவை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் இதுவரை ஆண்டுதோறும் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதி அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here