வடகொரியா தயார் நிலையில்

0
10

அண்டை நாடான தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க அங்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில் புதிய குளிர்கால விளையாட்டுப் பூங்காவை நிர்மாணித்துள்ளதாக வட கொரியா கூறுகிறது.

“மக்களின் பேரார்வத்தை” பிரதிபலிக்கும் வகையில் காங்யீ-யில் குளிர்கால விளையாட்டுப் பூங்கா திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டிமுடிக்கப்பட்டதாக ரையுக்யாங் செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தொழிலாளர்கள் மற்றும் உடல் வலிமை கொண்ட இளைஞர்கள்” பயனுள்ள வகையில் இது இருக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது வடகொரியா

வடகொரியாவின் கெளரவமும் ஒலிம்பிக் போட்டிகளும்

அதிபர் கிம் ஜோங்-உன்னின் உத்தரவின் பேரில் நாட்டில் வடக்கில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவின் கட்டுமானம் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது என்று கூறும் அரசு பத்திரிகை டிபிஆர்கே டுடே, தானாகவே பனியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதால், பனி பெய்யாத சமயத்திலும் இங்கு விளையாடலாம் என்று கூறுகிறது.மசிகிரியோங் பனிச்சறுக்குப் பூங்கா

“கட்சியின் விருப்பமின்றி இத்தகைய அற்புதமான கலாசார ஓய்வு விடுதியை நிறுவுவது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கட்டுமானத் தலைவர் கிம் சியோங்-இல், அரிரங் மியரி இணையத்தளத்தில் கேட்டுள்ளார்.

தென் கொரியாவின் என்.கே. நியூஸ் நிறுவனம், “மசிகிரியோங் வேகத்தில்” இதற்கான வேலை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறது. நாட்டின் முதல் பனி தங்கும் விடுதி மசிகிரியோங்கில் கட்டப்பட்டபோது, வெறும் அடிப்படை கருவிகளைக் கொண்டு அதிவேகத்தில் கட்டியதை நினைவுகூரும் வகையில் “மசிரியோங் வேகம்” என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here