சென்னை சூப்பர் கிங்ஸ்: பேட்டிங் பயிற்சியாளராக ஹஸ்சி நியமனம்

0
19

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மறுபிரவேசம் செய்ய இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

ஏனைய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கும் நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார். 42 வயதான மைக் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 64 ஆட்டங்களில் விளையாடி 2,213 ரன்கள் எடுத்தவர் ஆவார்.

ஹஸ்சி கூறுகையில், ‘ஒரு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அது மட்டுமின்றி சென்னையில் இப்போது நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள். மறுபடியும் சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here