கருவளையத்தை போக்குவது எப்படி?

0
12

தூக்கத்தில் குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு அட்டவணை, ஆரோக்கிய கோளாறுகள், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட நேரம் கம்ப்யுட்டரில் வேலை செய்வது, போன்றவற்றால் கரு வளையம் ஏற்படுகிறது.

கருவளையத்தை போக்க உருளை கிழங்கை ஏன் பயன்படுத்த வேண்டும்?

உருளை கிழங்கில் இயற்கையாக ப்ளீச்சிங் தன்மை உண்டு. இதனால், கண்ணுக்கு கீழ் உள்ள பகுதியின் கரு வளையங்கள் நீக்கப்படுகின்றன.

உருளை கிழங்கில் வைடமின் சி , வைடமின் ஏ , ஸ்டார்ச், என்சைம்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, கண்ணனுக்கு கீழே கரு வளையத்தை தடுக்கிறது.

உருளை கிழங்கிற்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. ஆகவே, கண்ணுக்குக் கீழே வீக்கம் மற்றும் சிவப்பு நிறம் உண்டாவதை தடுக்கிறது.

உருளை கிழங்கு, சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.

கருவளையத்தை போக்க உருளை கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? உருளை கிழங்கை பயன்படுத்தி கருவளையத்தை போக்க எளிய 10 குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உருளை கிழங்கு சாறு : காய்கறிகளில் , உருளை கிழங்கு கருவளையத்தை போக்க மிக சிறந்ததாகும்.Image result for உருளை கிழங்கு

இதனை சாறாக அல்லது துண்டுகளாக பயன்படுத்தி கருவளையத்தை போக்கலாம்.

வழிமுறை: ஒரு பெரிய உருளை கிழங்கை எடுத்து தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

அந்த சாறை , ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு அந்த சாறை எடுத்து, சிறிது பஞ்சை அந்த சாறில் நனைத்து கருவளையத்தில் வைக்கவும்.

15 நிமிடங்கள் அந்த பஞ்சை கண்ணில் இருந்து எடுக்க வேண்டாம். பிறகு பஞ்சை எடுத்து, குளிர்ந்த நீரால் கண்களை கழுவவும்.

கருவளையம் நீங்கும் வரை இந்த முறையை தொடர்ந்து செய்யவும்.
உருளை கிழங்கு துண்டுகள்:

மிக எளிய முறையில் கருவளையத்தை போக்க இந்த வழியை பின்பற்றவும்.

வழிமுறை : ஒரு உருளை கிழங்கை ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து, அதை வெளியில் எடுத்து, 2 சிறிய துண்டுகளை வெட்டவும். அந்த துண்டுகளை கண்களை சுற்றி வைக்கவும்.

கருவளையத்தின் மேல் இந்த உருளை கிழங்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பின்பு அதனை எடுத்துவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை இதனை செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here