கிளாமருக்கு துணிந்த ஜனனி

0
10

அவன் இவன், தெகிடி, அதேகண்கள், முப்பரிமானம், பலூன், விதி மதி உல்டா படங்களில் நடித்திருப்பவர் ஜனனி அய்யர். முதன்முறையாக விதி மதி உல்டா படத்தில் தூக்கலான கவுன் அணிந்து கிளாமராக நடித்துள்ளார்.

ஜனனியை கிளாமராக நடிக்க வைத்தது எப்படி என பட இயக்குனர் விஜய் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியது:விதி மதி உல்டா படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டது.

ரமீஷ் ராஜா ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தையும் தயாரித்திருக்கிறார். ஜனனி அய்யர் ஹீரோயின். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் திடீரென்று பைனான்ஸ் பிரச்னை வந்தது.

அந்தநேரத்தில் புதுவை கடற்கரை பகுதியில் பாடல் காட்சி ஒன்றை கஷ்டப்பட்டு படமாக்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது கடலில் நீந்த வந்த 3 இளைஞர்கள் இறந்து விட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. படக்குழு தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உருவானது.

படப்பிடிப்பை ரத்து செய்தால் மீண்டும் ஜனனியின் கால்ஷீட் கிடைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிடும்.

இதனால் நான் கவலை அடைந்தேன். எனது நிலையை புரிந்து கொண்ட ஜனனி, ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை படப்பிடிப்பை நடத்தி முடியுங்கள்’ என்று தைரியம் சொன்னதுடன் அவரே அக்காட்சியில் தூக்கலான கவர்ச்சி ஆடை அணிந்து நடித்தார்.

இது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. தவிர குளியல் காட்சி ஒன்றிலும் நடித்துக்கொடுத்தார். அந்த காட்சிகள் பேசப்படுவதாக அமைந்தது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here