டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை ரபாடா நம்பர் 1

0
11

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

இந்திய அணியுடன் கேப் டவுனில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்சில் 41 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்திய ரபாடா 888 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு பின்தங்கினார்.

இந்திய அணி ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (861) 3வது இடத்திலும், அஷ்வின் (830) 4வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் 5வது இடத்தில் உள்ளார்.

கேப் டவுன் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வெர்னான் பிலேண்டர் 6வது இடத்திலும், இந்திய வேகம் முகமது ஷமி 19வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (947), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (881), இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (880) முதல் 3 இடங்களில் உள்ளனர். அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்தியா (124), தென் ஆப்ரிக்கா (111), ஆஸ்திரேலியா (104) முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here