நரகாசூரனை களமிறக்கும் முன்பே அடுத்த படத்திற்கு ரெடியான கார்த்திக் நரேன்

0
54

துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது கார்த்திக் நரேன், ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் கெளதம் மேனன் தனது ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் கார்த்திக் நரேன். ‘மூன்றாவது படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறேன். என் மனதிற்கு பிடித்த ஸ்கிரிப்ட்டை எழுதி இருக்கிறேன். விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என்று டுவிட்டரில் கார்த்திக் நரேன் பதிவு செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here