பாராளுமன்ற அமளிதுமளி : மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி

0
10

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாராளுமன்றத்தை சபாநாயகர் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

மீண்டும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்காக பாராளுமன்றம் கூடும் என, சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், காமினி லெக்குகே மற்றும் மரிக்கார் ஆகியோருக்கிடையில் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில், மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே. இதையடுத்து காமினி லொக்குகேயின் இருப்பிடத்திற்குச் சென்ற மரிக்கார், காமினி லொக்குகே மீது அடித்து விட்டு பின்கதவால் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் சண்டைணை விலக்குப்பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்முற்று விழுந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here