வருகிறாள் பத்மாவதி

0
9

ராஜஸ்தானின்சித்தூர் ராணி பத்மினியின் கதையைமையமாக வைத்து எடுக்கப்பட்ட பத்மாவதிதிரைப்படம் சென்ற ஆண்டு இந்தியாமுழுவதும் பல சர்ச்சைகளில் சிக்கி,வெளியாக இருந்த கடைசிநேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில்ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனேநடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திரவம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேசிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கடந்த டிசம்பர்மாதம் வெளியாக இருந்த பத்மாவதிபடத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ்அளிக்க மறுத்துவிட்டதால், படம் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் ஆட்சே பகரமான காட்சிகளைநீக்கிய பின்பு மீண்டும் டெல்லியில்உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தணிக்கை குழுவினர் படத்தைபார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறுவலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசுசெய்தனர்.

இதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன்கில்ஜியும் பாடும் கனவு பாடல்காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டு மொத்தம்26 காட்சிகளில் வெட்டு போடப்பட்டது.

படத்தின்பெயர் ‘பத்மாவத்’ எனவும் மாற்றப்பட்டது. இதையடுத்துபடத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு.ஏ.சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி அளித்துள்ளது.படம் ரிலீஸ் தேதிஇன்னும் முடிவாகவில்லை.

இந்த படத்துக்கு எழுந்தஎதிர்ப்பு மற்றும் சர்ச்சை காட்சிகளுக்குகிடைத்த வரவேற்ப்பையொட்டி முன்பு திட்டமிடப்பட்டதை விடகூடுதலாக இந்தியாவின் பல நகரங்கள் மற்றும்60 நாடுகளில் படத்தை ஒரே நாளில்திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில்தற்போது படம் வரும் குடியரசுதினத்தை முன்னிட்டு வெளியாகவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here