சிம்புவை இயக்கும் அஜித் இயக்குநர்

0
14

அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சரண், சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரண். அத்துடன், அஜித்தை வைத்து ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ மற்றும் ‘அசல்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், விக்ரம், பிரசாந்த், மாதவன் என பல நடிகர்களை இயக்கியுள்ள சரண், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.

சரண் இயக்கப் போகும் படத்தில், ஹீரோவாக சிம்பு நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த விஷயம் இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே இருப்பதாகவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தில் தற்போது நடிக்க இருக்கிறார் சிம்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here