பாகிஸ்தானிய வர்த்தக கண்காட்சி – 2018 ஆரம்பம்

0
33

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாகிஸ்தானின் மூன்றாவது வர்த்தக கண்காட்சி கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியுடன் பாகிஸ்தானிய வர்த்தக அமைச்சர் மொஹம்மத் பெர்வேஷ் மலிக் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷஸ்மத் அஹ்மத் ஹஷ்மத் ஆகியோரும் இணைந்து இக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

பாகிஸ்தானிய வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபை (TDAP) இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மூன்றாவது முறையாகவும் “பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி -2018” ஐ ஜனவாரி 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.

இக்கண்காட்சியில் பாகிஸ்தானின்  பொறியியல் உற்பத்திகள், வாகன உதிரிப்பாகங்கள், விவசாய உற்பத்திகள், ஆடை மற்றும் புடைவை உற்பத்திகள், வடிவமைப்பு அணிகலன்கள், கைவினைப்பொருள் மற்றும் பாரம்பரிய ஆடைகள், அலங்காரப் பொருட்கள், மருந்துவகை, மூலிகைகள், வெட்டு உபகரணங்கள், தளபாடங்கள், கார்பட் வகைகள் மற்றும் மாபிள் உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பன பாகிஸ்தானின் முன்னணி வணிக நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்படுகின்றமை  குறிப்பிடதக்கது.

இதன் போது கருத்தத் தெரிவித்த பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர்,

“இக்கண்காட்சியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் வர்த்தக ஆர்வத்தினை மேலும்  ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்தலினை இலக்காக கொண்டுள்ளது. மேலும் இங்கு வருகைதந்திருக்கும் பாகிஸ்தானிய வர்த்தக கம்பனிகளை இலங்கை வர்த்தகர்கள் சந்திக்கும் மிகச்சிறந்த  சந்தர்ப்பத்தினையும் இக்கண்காட்சி வழங்குகின்றது”.

இலங்கை மக்கள் பாகிஸ்தானின் பல்வேறுவிதமான எண்ணிலடங்காத சிறந்த உற்பத்திகளை பார்வையிடுவது மட்டுமல்லாமல் இக்கண்காட்சியினை கண்டு மகிழ்வார்கள் எனத் தெரிவித்தார்.

இங்கு உரைநிகழ்த்திய பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர்,

“பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் சிறந்த இராஜதந்திர உறவு நிலவுகின்றது. இலங்கையானது வர்த்தக உறவுகளை ஏற்படுத்த கூடிய நாடுகளின் மத்தியில் முன்னனி வகிக்கின்றது.

பாகிஸ்தான் வர்த்தக சூழுலுடன் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். மேலும் தற்போதைய பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள கொள்கையானது  நுண் பொருளாதார ஸ்த்திரதன்மையினை அடைவதனை இலக்காக கொண்டுள்ளது. மேலும் இவ்வாறான வர்த்தகக் கண்காட்சிகள் மக்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் பரஸ்பர பொருளாதார அபிவிருத்திக்கு அடிதளமிடும் எனத் தெரிவித்தார்.

அங்குரார்பன நிகழ்வுகளின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுடன் கண்காட்சியில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தினால் விஷேடமாக அமைக்கப்பட்டிருந்த பௌத்த கலாச்சார கூடாரம் மற்றும் வர்த்தகக் கூடாரங்களுக்கு சமுகமளித்தார். இதன்பொழுது பாகிஸ்தானின் பௌத்த கலாச்சார விடயங்கள் அடங்கிய இறுவட்டு மற்றும் புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், வர்த்தகத் துறையினர், இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும் 14 ம் திகதி வரையில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here