பிரான்ஸ் ஹோட்டலில் ரூ.35 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

0
21

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ரிட்ஸ் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் ரூ.35 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ரிட்ஸ் என்ற 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளது. அங்கு பல நகைக்கடைகள் உள்ளன.

நேற்று திடீரென அங்கு கோடாரி மற்றும் துப்பாக்கியுடன் புகுந்த 3 கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக சுட்டு கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர். நகை கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் பதுங்கினர்.

இதற்கிடையே தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் தயாராக நின்ற மற்ற கொள்ளையர்கள் அவற்றை எடுத்துச்சென்று தப்பினர் . கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.35 கோடி என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹோட்டலின் கதவுகளை மூடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை. கொள்ளைபோன நகைகளை மீட்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here