வடகொரிய அதிபருடன் நல்லுறவு உள்ளது! – பின்வாங்குகிறாரா ட்ரம்ப்?

0
16

வடகொரிய அதிபர் கிம் மற்றும் எனக்குள் நல்லுறவு உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், வடகொரியா உடனான வார்த்தைப் போர் குறித்து பதிலளித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி பேசிய அவர், ‘எனக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இடையே நல்லுறவு உள்ளது. இது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்’ எனத் தெரிவித்தார்.

கிம் உடன் பேசினீர்களா எனக் கேட்டபோது, ‘நான் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் ஆம் அல்லது இல்லை என எதையும் கூறவில்லை. நான் இதைப் பற்றி எதுவும் கூறாதிருக்கவே விரும்புகிறேன்’ எனக் கூறினார்.

அமெரிக்கா – வடகொரியா இடையேயான வார்த்தைப் போரில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வட கொரிய அதிபரை குட்டி ராக்கெட் மனிதர் என்றும், நோய்வாய்ப்பட்ட நாய்க்குட்டி என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக கேட்டபோது, ‘இது ஒருவிதமான தந்திரம்தான். இதுபோல இன்னும் நிறைய பார்ப்பீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here