கவிஞர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு!

0
30

கவிஞர் வைரமுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து அவர் விளக்கிய விதம் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், கலைத் துறையினர் மற்றும் இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி செயலாளர் சூரி புகாரின் பேரில் ராஜாபாளையம் காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here