ஆப்பிள் அம்சங்களுடன் எல்ஜி….

0
27

எல்ஜி ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்படலாம் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், எல்ஜி ஜி சீரிஸ் கடைசி ஸ்மார்ட்போனாக எல்ஜி ஜி 7 வெளியாகும் என தெரிகிறது.

எல்ஜி ஜி 6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது இருக்கக்கூடும். தற்போது எல்ஜி ஜி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

எல்ஜி ஜி 7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா மற்றும் டிஎஸ்எல்ஆர் ரக செல்ஃபிக்களை எடுக்க வழி செய்யும். இத்துடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் 3D Facial Recognition அம்சம் வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.

இதே போன்று ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தனை ஆண்டுகளை விட எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுக வழக்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here