38 பில்லியன் டாலர் வரி செலுத்தவுள்ள ஆப்பிள்

0
44

அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் குவிந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 250 பில்லியன் டாலர் பணத்துக்கு, அந்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிகளின்படி 38 பில்லியன் டாலர் (380 கோடி டாலர்) வரி செலுத்தவுள்ளது அந்நிறுவனம்.

இந்த வரிச் சீர்திருத்தத்தின் பயனாக ஒரு நிறுவனம் செலுத்தவுள்ள அதிகபட்ச தொகையாக இதுவே இருக்கும்.

இந்த புதிய மாற்றங்களின்படி நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கார்ப்பரேட் வரிவிகிதம் 35 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் ஈட்டும் பணத்துக்கு கார்ப்பரேட் வரிவிகிதத்தின்படி வரி வசூலிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித் திறன் கூடும் என்றும் அவை அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய இந்த வரிகுறைப்பு ஊக்குவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாதிட்டார்.

அமெரிக்காவில் புதிய வளாகம் ஒன்றை அமைத்து 20 ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பும் தரவுள்ளது ஆப்பிள்.

அடுத்த ஐந்தாண்டுகளில் தமது திட்டங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு 350 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வெளிநாட்டில் உள்ள தமது பணத்தில் எவ்வளவு அமெரிக்காவுக்கு கொண்டுவரப்படும் என்று அது தெரிவிக்கவில்லை.

வேலைவாய்ப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் தமது முதலீட்டை குவிப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

வெளிநாட்டில் அதிக அளவில் பணத்தைக் குவிப்பதாக இந்த நிறுவனத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுந்தபோது வரி விதிகளை எளிமைப்படுத்தும்படி வலியுறுத்தியது ஆப்பிள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here