நேபாள இராணுவத்தளபதி முல்லைத்தீவு படைத்தலைமைக்கு விஜயம்.!

0
14

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.

உலங்கு வானூர்தி மூலம் வருகைதந்த நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here