அதிரடி அம்சங்களுடன் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

0
18

அதிரடி அம்சங்களுடன் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி:
ஹெச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது.
ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.சி. நிறுவனத்தின் யு11 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், சென்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஹெச்.டி.சி. யு11 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
– அட்ரினோ 540 GPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த ஹெச்.டி.சி. சென்ஸ் U.I
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. அல்ட்ராபிக்சல் 3 பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3930 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0
ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசிங் சில்வர் நிறத்தில் கிடைப்பதோடு இந்தியாவில் ரூ.56,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. விரைவில் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here