காதலர் தினத்தில் ரெட்மி நோட் 5

0
50

புதுடெல்லி:
இந்தியாவில் பிப்ரவரி 14-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி புதிய டீசர் புகைப்படம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளிப்கார்ட் சமீபத்திய ட்வீட் மூலம் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போனும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் சியோமியின் 5/5 ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போனிற்கு அனைவரும் காத்திருப்பதாக தெரிகிறது என்ற வாசகத்தை பிளிப்கார்ட் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதிகம் விற்பனையான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர் வார்த்தை குறிப்பிட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் 2018 காதலர் தின வெளியீடாக இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து சிறு வீடியோக்களை அவ்வப்போது சியோமி வெளியிட்டு வந்தாலும், ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரெட்மி 5 பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேஸ, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிபசெட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9 இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா, 1.25μm பிக்சல் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா, செல்ஃபி பிளாஷ் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here