பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை

0
16

பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.

அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதே கஷ்டமாக உள்ளது.

ரத்த சோகைக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டு பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக எட்டு முதல் பன்னிரெண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுக்குதான் அதிகளவு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வயதில் பொதுவாக பெண் குழந்தை பருவம் அடைவதால், இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்” என்கிறார் உமா ராகவன்.

தமிழகத்தை பொறுத்தவரை 55 சதவீதமான பெண்கள் ரத்த சோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 14 சதவீதமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here