கொரோனா ஊரடங்கு காரணமாக படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. படங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு? விஜய் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம், ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு?
- Master Admin
- 04 May 2020
- (623)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (627)
பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்
- 04 May 2020
- (704)
அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹே...
- 18 July 2026
- (145)
என்னோட ஆள் அஜித் தான்!! வெளிப்படையாக பேச...
யாழ் ஓசை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு
- 04 September 2026
பிரண்டையின் ரகசியம்: ஒரு கிராமத்து மூலிகைக்கதை
- 04 September 2026
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
- 04 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
- 04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
- 04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
- 04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
