ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறார். பொதுவாக கேந்திர திருஷ்டி யோகமானது ஒரு சக்திவாய்ந்த கிரக சேர்க்கையால் உருவாகக்கூடியது.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

இப்படிப்பட்ட கேந்திர திருஷ்டி யோகம் மார்ச் 18 ஆம் திகதி உருவாகப் போகிறது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

மேஷம்

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குரு பகவானின் ஆசியால் இக்காலத்தில் தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல நிதி நன்மைகளைத் தரும். சுக்கிரனின் அருளால் ஆளுமை மேம்படுவதோடு, கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

மிதுனம்

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சுக்கிரனின் அருளால் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

சிம்மம்

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

துலாம்

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் வாழ்வில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். உறவுகள் வலுவடையும். காதலில் வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். முக்கியமாக நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus

தனுசு

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறையான எண்ணங்கள் அதிகம் மனதில் தோன்றும். இதனால் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் திறம்பட கையாண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதனால் பணப் பிரச்சனைகள் தீரும்.

குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due Jupiter Venus