ஜோதிட கணிப்புகளில் எப்போதுமே கிரக நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரண நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில்,  நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன் பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட காரணம் இவர் அழகு, காதல்  மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படுகின்றார். 

சனி-சுக்கிரன் உருவாக்கும் அரிய யோகம்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! | Venus Saturn Creates Trikon Rajyog Who Get Luck

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் ஆளும் கிரகமாக கருதப்படும் சுக்கிரன்  நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 

இந்நிலையில், சுக்கிரன் இன்றைய தினம்  மார்ச் 01 ஆம் திகதி தனது உச்ச ராசியான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகின்றார்.

மீன ராசியில் ஏற்கனவே நீதியின் கடவுளாக அறியப்படும் சனி பகவான் இருப்பதால், சனி சுக்கிரனின் சேர்க்கையால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.அதனால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனி-சுக்கிரன் உருவாக்கும் அரிய யோகம்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! | Venus Saturn Creates Trikon Rajyog Who Get Luckமேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குறித்த கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளதால், இன்றிலிருந்து இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகின்றது.  நிதி நிலைமையில் பாரிய உயர்வு கிடைக்கும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் தம்பதியினருக்கு மத்தியில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு சுக்கிரனின் ஆசியால் ஆசைபட்ட காதல் வாழ்க்கை அமையும்.

தொழில் விடயங்களில் இதுவரையில் இல்லாத உயர்வு கிடைக்கும். உயர் மற்றும் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

சனி-சுக்கிரன் உருவாக்கும் அரிய யோகம்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! | Venus Saturn Creates Trikon Rajyog Who Get Luck

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குறித்த  கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்தால் இன்றில் இருந்து இவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகின்றது.

தொழில் ரீதியில் இதுவரையில் அனுபவித்த சிக்கல்கள்களுக்கு தீர்வு கிடைக்கும். நிதிநிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். இவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும் அதிர்ஷ்ட காலம் ஆரம்பமாகின்றது.

ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்ந்து இருவருக்கும் இடையில் காதல் அதிகரிக்கும்.

தனுசு

சனி-சுக்கிரன் உருவாக்கும் அரிய யோகம்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! | Venus Saturn Creates Trikon Rajyog Who Get Luck

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த சனி சுக்கிரன் சேர்க்கை இடம்பெற்றுள்ளதால், இவர்களின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். 

ஆடம்பர பொருட்கள் மற்றும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணியி்டத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

நீண்டகால கடன் தொல்லைகளுக்கு முடிவுகட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களின் பொருளாதார நிலையில் எதிர்பாரதாத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும்.