பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நாவூக்கு சுவையாக விதவிதமாக சமைத்து சாப்பிடுவதில் அலாதி இன்பம் இருக்கும்.சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.

அந்நவகையில் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் நிறைந்த உருளைக்கிழங்கை கொண்டு சற்று வித்தியாசமான முறையில், காரசாரமான கிழங்கு போத்தா எப்படி செய்வதென இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம்.   

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுநோய்களைத் தடுக்க துணைப்புரிகின்றது.

மேலும் உருளைக்கிழங்கில், உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிபதுடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.