உலகளாவிய ரீதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் உயிர்கொல்லி நோயாக புற்றுநோய் அறியப்படுகின்றது.

புற்றுநோய் என்றாலே பலருக்கும் மனதுக்குள் ஒருவித பயம் இருக்கும், உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கும் நாள்பட்ட நோயாக புற்றுநோய் கருதப்படுகிறது. 

அந்த நோய் தீவிர கட்டத்தை அடைந்துவிட்டால் உயிர் இழப்பு உறுதி என்பதால் தான் இதன் ஆரம்ப அறிகுறிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று உடலின் கலங்கள் பிரிந்து பெருகுவதனால் ஏற்படும் நோய் ஆகும்.

இந்த கலங்கள் பிரிந்து பெருகி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புற்றுநோய் கலங்கள் குருதியின் வழியாக பரவுகின்றன.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

இது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன புற்றுநோய் என பெயரிடப்படுகின்றது.

மேலும் புற்றுநோய் எந்த வயதினரையும் எந்த நாட்டவரையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது, சுருக்கமாக கூறினால் கலன்களின் வளர்ச்சி இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

 

அதனால் தான் உடலிலில் ஏற்படும் சின்ன சின்ன அறிகுறிகளை கூட அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலாசனை பெற வேண்டும் என புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்ப கால கட்டங்களிலேயே அறிகுறிகள் மூலம் புற்றுநோயை கண்டறிந்துவிட்டால், எளிதில் சிகிச்னையளிக்க முடிவதுடன் உயிர் ஆபத்தையும் கணிசமாக குறைக்கலாம்.

மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், ரத்தபுற்றுநோய், கருப்பை புற்றுநோய் என புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றன.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

முக்கிய அறிகுறிகள்

 

  • புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளை ஆராயும் பட்சத்தில்,
  • உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு அல்லது வீக்கம்
  • உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள்
  • ஆறாத புண்கள், தொடர்ச்சியான இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்
  • உணவை விழுங்குவத்தில் சிரமம்
  • உடல் எடையில் திடீர் மாற்றம்
  • மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்
  • இயல்புக்கு மாறான இரத்த போக்கு அல்லது இரத்த கசிவு

போன்ற மேற்கூறிய அறிகுறிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம்.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

எந்த புற்றுநோய்க்கும் பொதுவான அறிகுறி என்பது ”எடை குறைதல்”. காரணமே இல்லாமல் எடை குறைந்தால் எதனால் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.

வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவருக்கு பல் விழுதல், பல் துலக்குகையில் ரத்தக் கசிவு, வாயில் கட்டிகள் தென்படுதல் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

நுரையீரல் புற்றுநோய் இருப்பவருக்கு தொடர் இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருக்கலாம்.

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாக பசியின்மை உள்ளிட்டவையும், எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளாக கை, கால்களில் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகளும் ஏற்படலாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அதனை அலட்சியமாக எண்ணமாமல் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

புற்றுநோயை எவ்வாறு தடுப்பது

புற்றுநோயைத் தடுக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான உணவுக்கழக்கங்கள் என்பன முக்கியத்துவம் பெருகின்றது. 

புகையிலையைத் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும்.

ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, உடல் எடையை மேலாண்மைசெய்தல் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்தல் ஆகியவை புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம் | Cancer Symptoms In Tamil

நாம் தொடர்ச்சியான பயன்படுத்தும் ரசாயனம் கலந்த அழகுசாத பொருட்களும் கூட புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பதப்படுத்ப்பட்ட உணவுகளையும் நிறமூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வும் புற்றுநோய் அபாயத்தை வலுவாக அதிகரிக்கின்றது.