பொதுவாகவே மழைகாலங்களில் இடி, மின்னல் தாக்கம் அதிகமான இருக்கும். கிராம புரங்களில் இன்றளவும் கூட இடி இடிக்கும் போது அர்ஜூனா என்று பல முறை சொல்லும் வழக்கம் காணப்படுகின்றது.
இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் மற்றும் மத நம்பிக்கை குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பலமாக இடி இடிக்கும் நேரத்தில் ‘அர்ஜுனா... அர்ஜுனா...’ என்று சொல்லச் சொல்லும் வழக்கம் வெறும் மூட நம்பிக்கை என்று தான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் இதில் மதம் சா்ந்த நம்பிக்கை இருக்கும் அதே நேரம் அறிவியல் சார்ந்த உண்மையும் இருக்கின்றது.
இடிச் சத்தத்துக்குப் பயந்தவர்கள் இப்படி `அர்ஜுனா’ என்று சொன்னால் பயம் விலகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அர்ஜுனா என்று ஏன் சொல்கிறார்கள் ?
காண்டவ வனத்தை எரிக்க அர்ஜுனன் முயற்சிக்கும்போது அவனுடன் கண்ணனும் இருந்தார்.கண்ணன் துணையுடன் அர்ஜுனன் அந்த வனத்தை எரிக்க முயன்றபோது தேவலோகத்தின் அரசன் இந்திரன் இந்த செயலுக்கு எதிராக இடி, மழை, மின்னல் போன்ற இயற்கை சக்திகளை அனுப்பி அர்ஜுனனை தடுக்க முயன்றார்.
ஆனால், இடி, மழை, மின்னல் போன்ற தடைகளையும் தாண்டி காண்டவ வனத்தை எரித்து வெற்றி கொண்டான் அர்ஜுனன். அந்த அர்ஜுனனுக்கு பத்து பெயர்கள் உண்டு.

தனஞ்ஜயன், விஜயன், சுவேத வாகனன், கிரீடி, பீபத்சு, சவ்யசாசி, அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, பார்த்தன் என்ற 10 பெயர்கள் அர்ஜுனனுக்கு உண்டு.
இந்த பத்து பெயர்களையும் கூறினால் பாதுகாப்பாக அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காகவே அந்த பத்து பெயர்களையும் சொல்லும் முகமாக இடி இடிக்கும்போது அர்ஜுனன் தலை பத்து என்று கூறுகிறார்கள். அது மதம் மற்றும் புராணம் சார்ந்த நம்பிக்கை.

அறிவியல் காணம்
அர்ஜுனா" என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது, வாயின் அசைவுகள் காது அடைப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
"அர்" என்று சொல்லும்போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடுகிறது, "ஜு" என்று சொல்லும்போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது.
இந்த செயல்முறை, இடி சத்தத்தால் ஏற்படும் அதிகப்படியான காது அழுத்தத்தை சமன் செய்து, காது ஜவ்வை பாதுகாக்கிறது. எனவே, இடி சத்தத்தின்போது பயத்தைத் தவிர்த்து, காதுகளைப் பாதுகாக்கவே "அர்ஜுனா" எனச் சொல்கிறோம்.
