தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையத்திற்கு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சாலை வசதிகள் கிடையாது. இதனால் குதிரை மூலம் வாக்கு இயந்திங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானலிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளக்கெவி கிராமத்திற்கு குதிரை மூலம் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
