தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதையொட்டி காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்....
* 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது, வெற்றி உறுதி....
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தேவையற்ற கேள்விகள் வேண்டாம் என அவர் கூறினார்.
