தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அப்போது பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் முறை வாக்களிக்கும் அனைத்து இளைஞர் களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லோரும் போய் ஓட்டு போடுங்கள். இதுதான் நம் முடைய ஜனநாயகம். அந்த ஜனநாயகம் நமக்கு கிடைத்த உரிமையை நிச்சயம் நீங்கள் எல்லோரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். யாரும் ஓட்டு போடாமல் இருக்க கூடாது. முக்கியமாக இளைஞர்கள் நீங்கள் தான் எதிர்காலம். அதனால் கண்டிப்பாக உங்கள் மனசுக்கு எது சரி என படுகிறதோ அவங்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். ஆனால் கட்டாயம் எல்லோரும் வாக்களியுங்கள்.
நமது கடமை என நினைத்து ஒவ்வொருவரும் நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நான் வாக்களித்த வாக்குச்சாவடியில் காற்றோட்ட வசதி இல்லை. பேன் வசதி இல்லை. வயதானவர்களுக்கு கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
