வீடுகளில் எப்போதும் குழம்பையும் சாம்பாறும் வைத்து சாப்பிட்டு சமக்கு போர் அடித்திருக்கும். ஆனால் புளிக்குழம்பு என்றால் யாருக்காக இருந்தாலும் பிடிக்கும். 

நாக்கில் எச்சில் ஊறும் முருங்கைக்காய் புளிக்குழம்பு - இப்படி செய்து பாருங்க | Murungakkai Puli Kulambu Recipe How To Make

ஆனால் எப்போதும் போல புளிக்குழம்பு வைக்காமல் சற்று வித்தியாசமாக வைத்தால் சுவை நன்றாக இருக்கும். 

அந்த வகையில் முருங்கக்காய் இருந்தால் கமகம என்று மணக்கும் புளிக்குழம்பு இருந்தால் சுவை தாறு மாறாக இருக்கும். 

இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட நல்லது.  முருங்கைக்காய் புளிக்குழம்பின் எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

நாக்கில் எச்சில் ஊறும் முருங்கைக்காய் புளிக்குழம்பு - இப்படி செய்து பாருங்க | Murungakkai Puli Kulambu Recipe How To Make

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் - 2

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

வெல்லம் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

துவரம்பருப்பு - 1 ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10 பொடியாக நறுக்கியது

பூண்டு பல் - 10

பொடியாக நறுக்கிய பூண்டு - 5

நாக்கில் எச்சில் ஊறும் முருங்கைக்காய் புளிக்குழம்பு - இப்படி செய்து பாருங்க | Murungakkai Puli Kulambu Recipe How To Make

செய்முறை

முருங்கைக்காயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், உளுந்து மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

நாக்கில் எச்சில் ஊறும் முருங்கைக்காய் புளிக்குழம்பு - இப்படி செய்து பாருங்க | Murungakkai Puli Kulambu Recipe How To Make

பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் முருங்கைக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதன்பின் புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து விடவும்.

பின்னர் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைத்து, ஆவி வெளியான பிறகு திறக்கவும். கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழம்பு கெட்டியாக கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார்.