இந்தவார தமிழா தமிழா நிகழ்ச்சியில் மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து மீண்டவர்கள் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்ற இளம் பெண்ணொருவர் தாய் மற்றும் தந்தை தன்னை பற்றி தவறாக பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வெறும் 20 வயதில், ஐந்து முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றது குறித்து அரங்கத்தில் பகிர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழா தமிழா
நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வருகின்றது.
தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்துவழங்கி வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்த வாரம், மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து மீண்டவர்கள் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற 20 வயது பெண் தனது பெற்றோரின் கடுமையான வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் 5 முறை தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றமை குறித்து பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
