மறைந்த நடிகர் மனோபாலா படவாய்ப்பு இல்லாமல் தவறான முடிவை எடுக்க சென்ற போது அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை கூறியுள்ளார்.

நடிகர் மனோ பாலா

நடிகராகவும், இயக்குனராகவும் சினிமாவில் வலம்வந்த நடிகர் மனோபாலா கடந்த வந்த சில வலி நிறைந்த பாதைகளை நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு முன்னணி பிரபலமாக திகழ்ந்த மனோபாலா ஆரம்ப காலக்கட்டத்தில் திரைத்துறையில் சந்திக்க வேண்டும் என்ற கணவோடு சென்னைக்கு வந்துள்ளார்.

வாய்ப்புகள் தேடி அலைந்த தருணங்களில் அதிக ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான இவர் இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக் கொள்ள சென்றுள்ளார்.

 

உயிரை மாய்த்துக் கொள்ள திட்டம்

அப்பொழுது எதார்த்தமாக ரேடியோவில் கண்ணதாசனின் பாடல் வரிகள் கேட்டுள்ளது. மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா... வாழ்க்கையில் நடுக்கமா... என்ற பாடலே அதுவாகும்.

அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் அவருக்கு நேரடியாக ஒருவர் ஆலோசனை கூறுவது போன்று இருந்துள்ளது. அதிலும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு... என்ற வரிகள் சிந்தனையை அதிகமாக தூண்டியுள்ளது.

உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த நடிகர் மனோபாலா! ஒரு நொடியில் நடந்தது என்ன? | Manobala Wrong Decision Without Opportunity

தன்னை விட பலரும் இந்த உலகத்தில் கஷ்டத்தில் இருக்கும் போது நான் ஏன் இந்த கோழைத்தனமான முடிவை எடுக்க வேண்டும் என்ற கேள்வி அவரது முடிவை மாற்றியுள்ளது.

பின்பு அந்த எண்ணம் அடியோடு மாறி போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்ற பாடல் அவருக்கு மிகவும் மனவலிமையைக் கொடுத்ததாக நேர்காணலில் கூறியுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த நடிகர் மனோபாலா! ஒரு நொடியில் நடந்தது என்ன? | Manobala Wrong Decision Without Opportunity

தொடர்ந்து பாரதிராஜாவின் உதவியாளராக சேர்ந்து பின்பு, வெற்றிகரமான இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் உருவெடுத்து இன்றும் மக்களின் மனதில் தனது நடிப்பினால் வாழ்ந்து வரும் மனோபாலாவின் தெரியாத சோக பக்கம் ஆகும்.