கோடையில் வெள்ளை பூசணி சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலம்

கோடை காலம் என்றாலே உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நன்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறு இவற்றினை சாப்பிடுவது அவசியம்.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்று தான் பூசணி. வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இதில் சாறு எடுத்து குடித்தால் உடம்பில் பல மாற்றங்களை அவதானிக்கலாம்.

வைட்டமின் சி, பி1 அல்லது தயாமின், பி2, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடம்பில் நீர்ச்சத்து இழப்பினை தடுக்கின்றது.

கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க வேண்டும்? இந்த ஒரே ஒரு ஜுஸ் போதும் | What Benefits You Get By Drinking Pumpkin Juice

நன்மைகள் என்ன?

தினமும் ஒரு கிளாஸ் பூசணி சாறு அருந்தினால், வயிறு எரிச்சல், இரைப்பை அழற்சி இவற்றினைத் தணிக்கின்றது. உடலுக்கு குளிர்ச்சி தருவதால் இதனை கோடை காலத்தில் பருக பரிந்துரைக்கப்படுகின்றது.

செரிமானத்தை மேம்படுத்தவும், சிறந்த எடை குறைப்பு பானமாக வெள்ளைபூசணி சாறு பயன்படுகின்றது.

சிறுநீரகத்திற்கும், கல்லீரலுக்கு நன்மை அளிக்கின்றது. அதாவது நச்சுக்களை அகற்றுவதை திறம்பட செய்கின்றது. 

கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க வேண்டும்? இந்த ஒரே ஒரு ஜுஸ் போதும் | What Benefits You Get By Drinking Pumpkin Juice

மேலும் அதிக கொழுப்பை தடுப்பதுடன், ரத்த நாளங்கள் கொழுப்பினால் பாதிக்கப்படுவதை தடுத்து இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தொற்றுக்கள் மற்றும் சின்ன சின்ன நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க வேண்டும்? இந்த ஒரே ஒரு ஜுஸ் போதும் | What Benefits You Get By Drinking Pumpkin Juice

வெள்ளை பூசணியின் வெளிப்புற தோலை நீக்கிவிட்டு, விதைகளையும் நீக்கவும். பின்பு உள்ளே உள்ள சதைப்பகுதி, புதினா இலைகள், மிளகு மற்றும் கொத்தமல்லி இலை இவற்றினை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

பின்பு டம்ளர் ஒன்றில் வடிகட்டி, எலுமிச்சை சாறு, சிட்டிகை அளவு மற்றும் சில ஐஸ் கட்டி இவற்றினை சேர்த்தால் பூசணிக்காய் ஜுஸ் தயார்.