காலை உணவை நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஒரு காலை உணவு சாப்பிட வேண்டும் என்றால் இந்த கஞ்சியை குடித்தால் போதும்.

 

பார்லி கொள்ளு கஞ்சி

உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை நாம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நாம் சாப்பிடும் உணவு மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

பார்லி மட்டும் கொள்ளு உடலில் மிகவும் சக்தியை வழங்க்ககூடியது.  இவை உடலில் தசைகளை வலுப்படுத்த்தி நமது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கும். 

உடல் எடை குறைத்து நோய்களை குணமாக்கும் பார்லி மற்றும் கொள்ளு போட்ட கஞ்சி எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க | How To Make Kollu Barley Kanji Recipe

தேவையான பொருட்கள்

  • கொள்ளு - 1/4 கப்
  • பார்லி அரிசி - 1 கப்
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • மிளகு - 10
  • இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • சின்ன வெங்காயம் - 6-7 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • ப்ராக்கோலி - சிறிது (நறுக்கியது)
  • வாழைத்தண்டு - சிறிது (பொடியாக நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - 1 லிட்டர் 

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க | How To Make Kollu Barley Kanji Recipe

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளு பருப்பு மற்றும் பார்லி அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுக்க வேண்டும்.

வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்ததும் அதை இறக்கி, குளிர்ந்தபின் 2 முறை நன்றாக கழுவி, தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க | How To Make Kollu Barley Kanji Recipe

பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து ப்ராக்கோலி மற்றும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, ஊறவைத்த கொள்ளு மற்றும் பார்லியை நீரை வடிகட்டி சேர்க்க வேண்டும்.

பின்னர் உப்பு மற்றும் 1 லிட்டர் நீர் சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி 7–8 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க | How To Make Kollu Barley Kanji Recipe

விசில் இறங்கியதும் குக்கரைத் திறந்து, உள்ள கஞ்சியை லேசாக மசித்து விட வேண்டும். இதனால் கஞ்சி மென்மையாகி சுவை அதிகரிக்கும். இப்போது ஆரோக்கியமான, சுவையான கொள்ளு பார்லி கஞ்சி தயார்.