பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கூடியது தான் நெல்லிக்காய். இதில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றது.

நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா? | Tasty And Healthy Gooseberry Thokku Recipe

அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம்மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

தினசரி உணவில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன், கண்பார்வை கூர்மையாகும்.

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா? | Tasty And Healthy Gooseberry Thokku Recipe

மேலும் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், சரும பாதுகாப்பிக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட நெல்லிக்காயை கொண்டு, குழச்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் நெல்லிக்காய் தொக்கு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் - 10

நல்லெண்ணெய்- 1/4 கப்

மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி

புளி - ஒரு எலுமிச்சை அளவு (கரைத்தது)

பூண்டு - 20 பல்

வறுத்து அரைக்க ...

கடுகு- 1 மேசைக்கரண்டி

வெந்தயதம்- 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ற அளவு

பெருங்காயம்- சிறிய துண்டு ( வறுத்தது)

உப்பு - தேவையான அளவு

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா? | Tasty And Healthy Gooseberry Thokku Recipe

செய்முறை

முதலில் நெல்லிக்காயை சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடங்கள் நீராவியில் வேகவிட்டு, எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் ஆறியதும், விதையை நீக்கிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகெரப்பாக அரைத்து உடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் வாசனை வரும் அளவுக்கு வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா? | Tasty And Healthy Gooseberry Thokku Recipe

அதனையடுத்து அகலமாக பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணை சேர்த்து சூடானதும், கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பெரியவிட்டு, ஏற்கனவே அரைத்து வைத்த நெல்லிக்காயை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர், அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிக்கொடுக்க வேண்டும். அதனையடுத்து புளி கரைசலையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிக்கொடுக்க வேண்டும்.

நன்றாக தொக்கு பதத்துக்கு வந்ததும் 20 பல் பூண்டை நல்லெண்ணையில் பொரித்து அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் கலந்துவிட்டு இறக்கிளால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் நெல்லிக்காய் தொக்கு தயார்.