தவெக கட்சியின் தலைவர் விஜய்யின் மகள் சாஷா பதிவிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
பல தடைகளை தாண்டி வெற்றியை தட்டித் தூக்கிய விஜய்க்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் விஜய் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 தொகுதிகள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற கட்டாயம் உள்ளது.
ஆதலால் தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகியும் பயங்கர குழப்பத்தில் இருந்த தவெக கட்சியினருக்கு தற்போது கூட்டணி மூலமாக மேலும் ஒரு 10 தொகுதிகளை பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது விஜய்க்கு 118 தொகுதிகள் என்று கிடைத்துள்ளது. இன்று விஜய் பதவி ஏற்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மனைவியின் விவாகரத்து பிரச்சனை, ஜனநாயகம் படம் லீக் என அனைத்தையும் சமாளித்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சர் பதவியில் அமரவும் போகின்றார்.
மகளின் இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா தனது தந்தைக்கு வாழ்த்து கூறியதாக இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில் ஏஐ மூலமாக விஜய் குடும்ப புகைப்படங்கள் தொகுப்பாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த ஐடி விஜய்யின் மகள் சாஷாவின் ஐடி தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இதில் வெறும் 10 ஃபாலோவர்ஸ் மட்டுமே உள்ள நிலையில், இவை போலி ஐடியாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தேர்தல் முடிந்த பின்பு கூட மகள் சாஷா தந்தைக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து பதிவு வெளியிட்டதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் சாஷா வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டு பதிவில் அவரது குடும்ப புகைப்படம் மற்றும் தனது தோழிகளுடன் இருக்கும் சில புகைப்படங்களை தொகுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் குடும்பத்தில் பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
