தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் மற்றும் பயத்தில் பெற்றோர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: கொரிய இளைஞர் மீது காதல்! எதிர்க்கும் பெற்றோருக்கு கிடைத்த சரியான பதிலடி | Tamizha Tamizha Parent Against Children Love

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் மற்றும் பயத்தில் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.

இதில் காதல் திருமணம் செய்து கொண்ட பெற்றோரே பிள்ளையின் காதலுக்கு எதிராக இருக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் பிடிவாதகமாக தான் காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகின்றனர்.

இளம்பெண் ஒருவர் கொரியன் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து, அவருடன் மாதம் ஒருமுறை வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கின்றார்.

இதனை கேட்ட தொகுப்பாளர் ஆவுடையப்பன் இங்கு இருக்கிற இந்திய பெற்றோருக்கு வெடிகுண்டை வீசுறியேமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்..