சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை இந்த பதிவில் காணலாம்.

நாவல் பழத்தின் சத்துக்கள்

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. .

ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கு நண்பனாக இருக்கும் நாவல்பழத்தினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.

ஆதலால் ஜுன், ஜுலை மாதங்களில் கிடைக்கும் நாவல்பழத்தினை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்.. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நாவல் பழம் எவ்வாறு உதவுகிறது என்று கீழே காணலாம். 

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | Benefits Of Diabetic Patient Eating Jamun Fruit

 

என்ன பலன்:

இந்த பழத்தில் உள்ள கிளைசெமிக் நமது இரத்த சர்க்கரை அளவை உயர்வதை தடுக்கிறது.அது மட்டுமின்றி இதில் நார்ச்சத்து உள்ளதால் இது நம் செரிமானத்தை மேம்படுத்தும்.

பாரம்பரிய மருத்துவமான சித்த, மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் இதன் விதையை பொடியாக்கி இதை நீரிழிவுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.  

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | Benefits Of Diabetic Patient Eating Jamun Fruit

 

இதை பழமாகவோ, அல்லது அதில் உள்ள விதையை பொடியாக்கியும் சாப்பிடலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.