பொதுவாக சிங்கம் குரங்கை வேட்டையாடுவதற்கு மரத்தில் ஏறும் என்பதை பெரும்பாலும் கதைகளில் தான் கேட்டிருப்போம்.

இது போன்ற பழமொழிக் கதைகளில், புத்திசாலித்தனமான குரங்கு தனது சாதுரியத்தால் சிங்கத்தை ஏமாற்றி தப்பிவிடுவதே வழக்கம்.

சிங்கத்தின் உடல் எடை மற்றும் வேட்டையாடும் விதம் என்பன மரத்தின் உச்சிக்குச் செல்ல உகந்தது அல்ல இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் பெரும்பாலும் நிகழ்வது கிடையாது.

ஆனால் சில சமயங்களில் கதைகளில் கேட்டவைகளும் நிஜத்தில் நடக்கும் என்பதை பறைசாற்றும் வகையில், பிரம்மாண்டமாக வளர்ந்த சிங்கமொன்று குரங்கை வேட்டையாட மரத்தின் உச்சிக்கே சென்றுள்ளது.

ஆனாலும் குரங்கைப் பிடிக்க முடியாமல் நீண்ட நேரம், தடுமாறிய காட்சியடங்கிய பதறவைக்கும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.