சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது அதிகரித்து வரும் சர்வதேசப் புகழால் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 10வது வருடாந்திர க்ரஞ்சிரோல் அனிமே விருதுகள் விழாவில், உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்று உலக அரங்கில் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளார்.

ராஷ்மிகா, 2026 மே 23 அன்று டோக்கியோவில் உள்ள கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டல் டகனாவாவில் நடைபெறும் இந்த மதிப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

அனிமே விருதுகள்
அனிமே விருதுகள் சோனி நிறுவனத்தின் அனிமே (Anime) ஸ்ட்ரீமிங் தளமான கிரன்சிரோல் ஆண்டுதோறும் அனிமே விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 10-வது சர்வதேச அனிமே விருதுகள் 2026 விழா நேற்று (மே 23ஆம் தேதி) டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், நடிகை ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,மேடையில் 'பிளாக் பாந்தர்' பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து இந்த ஆண்டின் 'சிறந்த அனிமேஷன்' விருதை அவர் வழங்கினார்.

சிறந்த அனிமே விருதை 'சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் பிரம் தி ஷேடோ வென்றது. சர்வேதேச அளவில் நடைபெறும் அனிமே விருதுகள் மேடையில் இந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தனா பங்கேற்று விருது வழங்கியுள்ளமை இந்திய சினிமாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகின்றது.
