வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றது. உடலுக்கு உடனடியான ஆற்றலை அளிக்கின்றது.
இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற வைட்டமின்களும் அதிகமாக தாதுக்களும் அடங்கியிருக்கின்றது.

தினமும் ஒரு வாழைப்பழம் நாம் எடுத்துக்கொண்டால் உடம்பில் பல மாற்றங்களை அவதானிக்கலாம்.
நன்மைகள் என்ன
வாழைப்பழத்தில் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இருப்பதால் இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தங்கள் விளையாட்டை ஆரம்பிக்கும் முன் மற்றும் விளையாட்டு இடைவேளியின் போதும் அவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். இதை நாம் காலை உணவாகவும் சாப்பிடலாம்.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமின்றி இதில் இரும்புச்சத்து உள்ளதால் இது நம் இரத்த அளவை உயர்த்த உதவுகிறது.

இதையும் தவிர்த்து இது நம் சருமம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. ஏனென்றால் இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் கண் மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது. இதை நாம் முகத்திற்கு ஃபேஸ் பாக் பயன்படுத்துவார்கள். இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல ஊட்டச்சத்து தருகிறது. இது குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனையை தடுக்க உதவுகிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதை நாம் சாப்பிடும் போது இரத்த சர்க்கரை அளவு, உடல் எடை குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஏனென்றால் இதில் எதிர்ப்பு ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இது ஒரு இயற்கை மருந்தாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி நம் பல நோய்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

