வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நேற்று (26-05-2026) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவான் மிதுனத்தில் இருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி

குரப்பெயர்ச்சி

மேஷம்

  • நினைத்த காரியங்கள் நிறைவேறும் காலம்.
  • வேலைப்பிடத்தில் பாராட்டு மற்றும் ஆதரவு கிடைக்கும்.
  • பயணங்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • சுபகாரியத் தடைகள் நீங்கும். வருமானம் வந்தாலும் செலவையும் கட்டுப்படுத்துவது நல்லது.
  • பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி மற்றும் பெருமை ஏற்படும்.
  • தொழிலில் நேரடி கவனம் வெற்றியை தரும். 

ரிஷபம்

  • திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் பொறுமையும் நேர்த்தியும் அவசியம்.
  • தாமதமான விஷயங்களும் பின்னர் சாதகமாக முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் அமைதியை தரும்
  • பூர்வீக சொத்து மற்றும் சுபகாரிய வாய்ப்புகள் கைகூடும்.
  • தொழிலில் நிதானம் லாபம் தரும்; பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
  • உடல்நலத்தில் கவனம் தேவை, குறிப்பாக ரத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் எச்சரிக்கை அவசியம்.
  • நரசிம்மர் வழிபாடு நன்மை தரும். 

மிதுனம்

  • உழைப்பால் முன்னேற்றம் பெறும் காலம். அலுவலகத்தில் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.
  • தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயங்களில் அதிக கவனம் அவசியம்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்; கடுமையான பேச்சால் அதை குலைக்க வேண்டாம்.
  • வீடு, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய கடன்களை சரி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும்.
  • புதிய ஒப்பந்தங்களில் பொறுமை தேவை.
  • அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற நல்ல முன்னேற்ற அறிகுறிகள் தோன்றும். 

கடகம்

  • முன்னேற்றமும் உயர்வும் கிடைக்கும் சிறப்பான காலம்.
  • வேலைப்பிடத்தில் திறமைக்கு மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.
  • துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
  • தொழிலில் சீரான வளர்ச்சி காணப்படும்.
  • நேர்மையும் முழு கவனமும் தொடர்ந்த வெற்றியை தரும். 

சிம்மம்

  • பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றமும் மதிப்பும் அதிகரிக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உருவாகும்.
  • குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்; பெற்றோரின் உடல்நலம் மேம்படும்.
  • உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். துணையுடன் அமைதியாக நடந்துகொள்வது நல்லது.
  • தொழிலில் வளர்ச்சி பாதை தெளிவாகத் தெரியத் தொடங்கும்.

கன்னி

  • யோசித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் பதவி மற்றும் ஊதிய உயர்வு வாய்ப்புகள் உருவாகும்.
  • அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை பயன் தரும். ஆவணங்கள் மற்றும் கையெழுத்து விஷயங்களில் கவனம் அவசியம்.
  • குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
  • விட்டுக்கொடுத்து நடந்தால் அமைதி நிலைக்கும்.
  • பிள்ளைகள் தொடர்பான சுபகாரியங்கள் கைகூடும். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.
  • தொழிலில் நேரடி கவனமும் முயற்சியும் வெற்றியை தரும்; பெரிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
  • அரசு பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி உண்டு. 

துலாம்

  • திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும்.
  • தற்போதைய உழைப்பு எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • துணையுடன் மனம் திறந்து பேசுவது நல்லது. பெரியோரின் ஆலோசனை பயன் தரும்.
  • பிள்ளைகள் மீது அதிக கண்டிப்பு தவிர்க்கவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
  • தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
  • தொழிலில் வளர்ச்சி தொடரும்; புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

விருச்சிகம்

  • முன்னேற்றமும் மாற்றங்களும் ஒன்றாக வரும் காலம். வேலைப்பிடத்தில் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
  • மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களுடன் அமைதியாக நடப்பது நல்லது.
  • சிலருக்கு இடமாற்ற வாய்ப்பு இருக்கலாம். குடும்பத்தில் இனிமையும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
  • உறவினர்களிடையே மதிப்பு உயரும். சொத்து சேர்க்கை மற்றும் சுபநிகழ்ச்சிகளில் முன்னிலை பெறுவீர்கள்.
  • வெளிநாட்டு தொடர்பான வர்த்தகங்களில் நேரடி கவனம் அவசியம்.
  • அரசு துறையினருக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். 

தனுசு

  • தன்னம்பிக்கை உயர்ந்து முன்னேற்றம் தரும் காலம். வேலைப்பிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  • தேவையற்ற வாக்குவாதங்களையும் வாக்குறுதிகளையும் தவிர்ப்பது நல்லது.
  • மேலதிகாரிகள் கொடுக்கும் பொறுப்புகளை கவனமாக செய்தால் உயர்வு உறுதி.
  •  துணையுடன் நல்ல புரிதல் உருவாகும்.
  • சிலருக்கு புதிய வாழ்க்கை அமைக்கும் வாய்ப்புகள் தோன்றும்.
  • குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். வருமானம் அதிகரித்தாலும் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
  •  வெளிநாட்டு வர்த்தகங்களில் சட்ட விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். 

மகரம்

  • மேன்மைகளும் முன்னேற்றமும் அதிகரிக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் உயர்வுகள் கைகூடும்.
  • அனுபவமுள்ளவர்களின் ஆதரவு வெற்றிக்கு உதவும்.
  • மேலதிகாரிகள் உங்கள் திறமையை மதிப்பார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம்.
  • குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
  • பிள்ளைகள் மூலம் பெருமை அதிகரிக்கும்.
  • துணையுடன் உறவு வலுப்படும். உறவினர்களிடையே மதிப்பு உயரும்.
  • தொழிலில் நிலையான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனைகளை நேரடியாக கவனிப்பது நல்லது. 

கும்பம்

  • பொறுப்புடன் செயல்பட்டால் முன்னேற்றமும் மதிப்பும் கிடைக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் வரும்.
  • மேலதிகாரிகளுடன் அமைதியான நடத்தை அவசியம். சக ஊழியர்களின் ஆதரவு உதவியாக இருக்கும்.
  • இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட்டால் பொறுமை கடைபிடிக்க வேண்டும்.
  • குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுவது நல்லது. துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
  • சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் மீது அளவுக்கு மீறிய கண்டிப்பு தவிர்க்கவும்.
  • சொத்து விஷயங்களில் பிடிவாதம் வேண்டாம். தொழிலில் நிலையான உயர்வு ஏற்படும். 

மீனம்

  • முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் காலம்.
  • வேலைப்பிடத்தில் திட்டமிடலும் நேரத்தைக் கடைபிடிப்பதும் முக்கியம்.
  • வீண் கோபம் மற்றும் தர்க்கங்களை தவிர்ப்பது நல்லது.
  • மேலதிகாரிகளுடன் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.
  • பிறரை விமர்சிப்பதைத் தவிர்த்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது முன்னேற்றத்தை தரும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும். துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
  • பெரியோரின் ஆலோசனை கேட்பதால் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
  • கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தை சேமிப்பது அவசியம்.
  • தேவையற்ற கடன்களைத் தவிர்க்கவும். தொழிலில் வளர்ச்சி தொடரும்
  • அரசு பணியாளர்களுக்கு நிதானமான செயல்கள் முன்னேற்றம் தரும்.