உடல் எடையை குறைக்க உதவும் வெஜிடபுள் பார்லி கஞ்சி எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

பார்லி கஞ்சி

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து காணப்படுவதால் பலரும் சிரமத்தில் காணப்படுகின்றனர்.மேலும் எடையைக் குறைப்பதற்கும், கடுமையான டயட் முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்ல சத்தான மற்றும் உடல் எடையை குறைக்க தூண்டும் உணவினை தெரிவு செய்து சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதாக குறைக்கலாம்.  

அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பார்லி அரிசி - 100 கிராம் 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து 

சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் 

சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது) 

பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது) 

பட்டாணி - 1/4 கப்

ஸ்வீட் கார்ன் - 1 கையளவு 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் 

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 

உப்பு - சுவைக்கேற்ப 

தண்ணீர் - தேவையான அளவு 

பச்சை மிளகாய் - 1

சுடுநீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த கஞ்சியை குடிங்க | How To Prepare Vegetable Barely Kanji Recipe

 

செய்முறை: 

முதலில் பார்லி அரிசியை நன்கு கழுவி பின் அதை தண்ணீரில் 8 மனி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி ஜாரில் போட்டு பாதியாக அரைக்கவும்.

பின் ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

அது நன்கு வதக்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் அதில் நறுக்கி வைத்த கேரட் மற்றும் பீன்ஸ் , பட்டாணி, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கவும்.

உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த கஞ்சியை குடிங்க | How To Prepare Vegetable Barely Kanji Recipe

 

பின் அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய பின் நாம் அரைத்து வைத்த பார்லியை சேர்த்து நன்கு கிளறி பின் அதை மூடி வைத்து 3-4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

இதை இறக்கிய பின் சிறிது கொத்தமல்லி, மிளகு தூள் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து இறக்கினால் சுவையான பார்லி கஞ்சி ரெடி.