நமது ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் நமக்கு தீங்கு ஏற்படுத்துகின்றது. மேலும் பல உடல்நல பிரச்சனையையும் கொண்டு வருகின்றது.

அதிலும் நாகரீகம் மற்றும் டயட் என்ற பெயரில் உணவுக் கட்டுப்பாடு பல நோய்களைக் கொண்டு வருகின்றது. அதிலும் கடைகளில் பாட்டிலில் விற்கப்படும் கார்பனேட்டட் குளிர்பானங்களையும் மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இவை நமது ஆயுள்காலத்தினை குறைக்கின்றது என்பது தான் உண்மை. அந்த வகையில் நமது ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளைக் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ் பாக்கெட், நூடுலஸ், ஜங்க் புட் இவற்றினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சர்க்கரை, உப்பு, பதப்படுத்த பயன்படுத்தும் கெமிக்கல், கெட்ட கொழுப்பு இவை உடம்பிற்கு சென்று சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனையை கொண்டு வரும்.

அதுமட்டுமின்றி இறுதியாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தினை ஏற்படுத்தி ஆயுளைக் குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan

குளிர்பானங்கள்

கடைகளில் கலர் கலராக விற்கப்படும் குளிர்பானங்களான கார்பனேட்டட் பானங்கள் அதிகமான விரும்பி மக்கள் குடிக்கின்றனர். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி குடிக்கும் நிலையில், இதனால் பல உடல் தொந்தரவு ஏற்படுகின்றது.

இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுவதுடன், தொடர்ந்து குடிக்கும் போது இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகின்றது. கொழுப்பு, கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதியை கொண்டு வருகின்றது.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan

எண்ணெய்யில் பொரித்த உணவுகள்

எண்ணெய்யில் பொரித்த உணவுகள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக சூடுபடுத்தும் போது, அதிலுள்ள நல்ல கொழுப்பு நஞ்சாகி, கெட்ட கொழுப்பாக மாறுகின்றது.

சிக்கன், முட்டை போன்ற சத்தான உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் கிடைக்காமல் போவதுடன், ரத்த குழாயில் கொழுப்புகள் படிந்து இறுதியில் மாரடைப்பினை ஏற்படுத்துகின்றது.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan

உப்பு நிறைந்த உணவுகள்

கோடியம் குளோரைடு என்று கூறப்படும் உப்பு அதிகமாக உடம்பிற்கு செல்லும் போது ரத்தக்குழாய்கள் சேதப்படுவதுடன், ரத்த அழுத்தமும் அதிகமாகின்றது.

இதனால் உடம்பில் பல உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றது. ஊறுகாய் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள் அனைத்தும் உப்பு அதிகமாக இருக்கின்றது. கருவாடும் அதிகமாக எடுது்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தினையும் சேதப்படுத்துகின்றது.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan

உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்

உறைய வைக்கப்பட்ட இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி இவற்றிலிருந்து பெரும்பாலும் சத்துக்கள் கிடைப்பதில்லை. இவை நோய்களையே ஏற்படுத்துகின்றது. எனவே தான் இந்த வகையான உணவினை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான் | Eating These Foods Can Reduce Your Lifespan