பொதுவாக பெரும்பாலான கோயில்களில் மணி அமைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அந்த மணியை அடிக்கலாம். குறிப்பாக சிறுவர்களுக்கு கோயில் மணியை அடித்து மகிழ்வது ஒரு தனி ஆனந்தமாக இருக்கும்.

கோயிலுக்குச் செல்லும்போது, இறைவனை தரிசனம் செய்யும் முன்போ அல்லது தரிசனத்தின் போதோ கோயில் மணியை அடிப்பது வழக்கமாக உள்ளது.

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | What Is The Purpose Of Ringing A Bell In A Temple

ஆனால், கோயில் மணியை ஏன் அடிக்கிறோம் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது குறித்த விரிவான ஆன்மிக மற்றும் அறிவியல் விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மணி அடிப்பன் ரகசியம்

கோயிலுக்குச் செல்லும் பெரும்பாலானோர் ஏன், எதற்காக மணி அடிக்கப்படுகிறது என்பதை அறியாமலேயே அந்த வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.

கோயில் மணி ஓசைக்கும் மனித மூளைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நமது முன்னோர்கள் ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர்.

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | What Is The Purpose Of Ringing A Bell In A Temple

பூஜை வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் மணியின் ஓசையின் பின்னணியில் ஆன்மிகத்துடன் சேர்ந்து அறிவியல் நுண்ணறிவும் அடங்கியுள்ளது. சிலர், கோயிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் தங்களின் வேண்டுதல்களை கடவுள் கவனமாகக் கேட்பார் என்று நம்புகின்றனர்.

ஆனால், மணி அடிப்பதன் உண்மையான நோக்கம் அதுவல்ல. ஆகம சாஸ்திரங்களின்படி, கோயில் மணியில் இருந்து எழும் ஓசை எதிர்மறை சக்திகளை விலக்கி, மனதிற்கும் உடலிற்கும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது.

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | What Is The Purpose Of Ringing A Bell In A Temple

மேலும், கோயில் மணியின் ஒலி மனித மூளையின் செயல்திறனைத் தூண்டி, விழிப்புணர்வை மேம்படுத்துகிறது என சில அறிவியல் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

கோயில் மணியில் இருந்து வெளிப்படும் ஒலிக்கு ஒரு தனித்துவமான அதிர்வு உள்ளது. இந்தச் சிறப்புக்குக் காரணம், மணியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களாகும்.

கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது. சரியாக சொல்லபோனால் இந்த ஒளியானது 7 வினாடிகள் வரை நீடித்த ஒலியை எழுப்புகின்றது.

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | What Is The Purpose Of Ringing A Bell In A Temple

இந்த மணியில் இருந்து வரக்கூடிய ஒலியானது நமது உடலில் காணப்படும் 7 முக்கிய மையங்களில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக நமது மூளையானது ஒருநிலைப்படுத்தப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீங்கி மன அழுத்தம் குறைகின்றது.

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | What Is The Purpose Of Ringing A Bell In A Temple

மணியின் ஓசை, மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளின் செயல்பாட்டை சமநிலைப்படுத்தி, மன ஒருமைப்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது.கோயில் மணியடிப்பது துர்சக்திகளை விரட்டுவதற்கான ஒரு வழிபாட்டு முறையாக பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

பூஜையின்போது மணியை ஒலிக்கச் செய்வதற்கு முன், “ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம் கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்சனம்” என்ற மந்திரம் ஓதப்படுகிறது. இதன் பொருள், “தீய சக்திகள் விலகி, இறை சந்நிதி இந்த இடத்தில் பெருகட்டும்” என்பதாகும்.