படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லவ் ஓ லவ்.  பவிஷுடன், தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

மேலும், இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

போகன் திரைப்பட இயக்குநர் லக்‌ஷ்மனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.