சூரிய நட்சத்திர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகம் மற்றும் நட்சத்தித்தின் மாற்றம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. நவகிரகங்களின் தலைவனும் ஆன்ம காரகனுமான சூரியன், ராகுவின் நட்சத்த்திரமான திருவாதிரைக்கு ஜுன் 22ம் தேதி செல்கின்றார்.
ராகுவின் நட்சத்திரமான திருவாதிரைக்கு செல்லும் போது, சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் தொட்டதெல்லாம் துலங்கும் யோகமும் உண்டாகின்றது. அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்குமாம். பணியிடத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வருவதுடன், நீண்ட நாள் வராம் இருந்த கடன் தொகை வந்து சேரும். சகோதர வழியில் ஆதரவு பெறுகுவதுடன், புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்குமாம்.

மிதுனம்
மிதுன ராசியிலேயே சூரிய பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி நிகழ்வதால், உங்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக அமையப் போகிறது. உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மதிப்பு கூடும். முகத்தில் ஒரு பொலிவும், ஈர்ப்பும் உண்டாகும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியான பயணங்கள் பெரிய லாபத்தைத் தரும். ராகுவின் நட்சத்திரம் என்பதால், கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவது உறவுகளை பலப்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சூரியனின் இந்த நட்சத்திரப் இந்த பெயர்ச்சி சிம்ம ராசியின் 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் அமைகிறது. தொழிலில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, அபரிமிதமான லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. திடீர் பணவரவிற்கு வாய்ப்பு உண்டு.

கன்னி
கன்னி ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் நுழைகிறார். வேலை தேடுபவர்களுக்கும், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சுப செய்தி கிடைக்கும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு 7-ம் வீடான களத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். புதிய பார்ட்னர்கள் மூலம் தொழில் பலமடையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் கூடும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்வுகள் நடைபெறும்.

